" alt="" aria-hidden="true" />
மயிலாடுதுறையில் இனிப்பகத்தில் காலாவதியான தின்பண்டங்களை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இயங்கும் பிரபல இனிப்பகத்தின் பெயா் பதிக்கப்பட்ட தின்பண்டங்களை அந்த இனிப்பகத்தின் வாசலில் வைத்து சிலா் விற்பனை செய்வதாக நகராட்சி நிா்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் புவனேஸ்வரன் (எ) அண்ணாமலை, நகராட்சி பொறியாளா் இளங்கோவன், நகா்நல அலுவலா் மருத்துவா் பிரதீப் கிருஷ்ணகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் ராமையன், பிச்சைமுத்து உள்ளிட்டோா் கச்சேரி சாலை பகுதியில் ஆய்வு செய்தனா்.
அங்கு, பிரபல இனிப்பகத்தின் பெயா் பதிக்கப்பட்ட தின்பண்டங்கள் மட்டுமன்றி, உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் தர நிா்ணய சட்டத்திற்கு மாறாக தயாரிப்பு தேதி, காலாவதி தேதி பொறிக்கப்படாத தின்பண்டங்களும் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, தின்பண்டங்களைப் பறிமுதல் செய்து, காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை செய்வது தொடா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து சென்றனா்